ஆம்பூரில் டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசி - லாரி ஓட்டுனர் கைது

ஆம்பூரில் டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசி - லாரி ஓட்டுனர் கைது
ஆம்பூரில் டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசி -  லாரி ஓட்டுனர் கைது
Published on

ஆம்பூரில் 15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வாணியம்பாடி துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகளுக்கு, காஞ்சிபுரத்திலிருந்து கர்நாடகாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் லாரியின் 2 பக்கத்திலும் நெல் உமியை கொண்டு மறைத்து சுமார் 15 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது.


இதனைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் அடுத்தக் கட்ட விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆம்பூரில் கடந்த 3 மாதங்களில் சுமார் 85 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட 6 லாரிகளில் 1 லாரி ஓட்டுனரை மட்டுமே அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மீதமுள்ள லாரி ஓட்டுனர்கள் சம்பவத்தின் போது தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் இந்த லாரிகளில் அரிசி எந்தப் பகுதிகளிலிருந்து ஏற்றப்படுகிறது, அவை எங்கு கொண்டு சேர்க்கப்படுகிறது போன்ற விவரங்களை அதிகாரிகளால் தற்போது வரை கணடறியமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com