சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது இன்று பொது விவாதம் நடைபெறவுள்ளது. 12 மசோதாக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்.
வேளாண் பட்ஜெட்டில் பால்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீடு 42,281 கோடி ரூபாயாக அதிகரிப்பு.
மண்ணையும், மக்களையும் காப்பது போல அமைந்துள்ளது வேளாண் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
விவசாயிகளுக்கு பயன்தராத பட்ஜெட் எனவும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழக அரசுடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
‘கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் பெண்களின் மாதந்திர சேமிப்பு ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு; 43 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர்’ - CAG நுகர்வோர் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக, அதிமுக முட்டுக்கட்டையாக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறு பேச்சு விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்கும் திரை பிரபலங்கள். அருவருக்கத்தக்க வகையில் பேசியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை என த்ரிஷா உறுதி.
எனது கருத்தால் மனது புண்பட்டிருந்தால் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ விளக்கம்.
பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமிக்கு மார்ச் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு. மேலும் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், சினேகம் பவுண்டேசன் பெயரில் மோசடி செய்தது உறுதியாகியுள்ளது.
சென்னை செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி நிறைவு. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக தகவல்.
சென்னையில் அந்நிய செலவாணி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மோசடி செய்து 450 பேரிடம் இருந்து 66 கோடி ரூபாய் வரை சுருட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே ஆவின் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்.
நாகர்கோவில் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பாறைகள், மாட்டின் மண்டை ஓடுகளை வைத்தவர்கள் குறித்து விசாரணை.
மேட்டுப்பாளையம் அருகே 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பில், மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சோகம்.
பீகார், ஜார்க்கண்ட்டில் பாரதிய ஜனதா மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய மெகா கருத்துக்கணிப்பில் தகவல்.
பீகாரில் நடைபயணத்தை தொடங்கினார் தேஜஸ்வி யாதவ். கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் டெல்லி நோக்கி மீண்டும் படையெடுக்கும் வடமாநில விவசாயிகள்
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி என அறிவித்த உச்சநீதிமன்றம்.
“தேர்தல் ஜனநாயகத்தின் செயல் முறையை சூழ்ச்சிகளால் முறியடிக்க அனுமதிக்க முடியாது. இத்தீர்ப்பு பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி” என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருத்து
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து.
ராஜஸ்தானில் இருந்து முதன்முறையாக மாநிலங்களவை எம்.பியானார் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு சென்றார் இணை அமைச்சர் எல்.முருகன்.
டிசம்பர் 31ஆம் தேதி சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளியேறும் வெப்ப கதிர்வீச்சை ஆதித்யா விண்கலம் எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் கோரி ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவந்த அல்ஜீரியா. ஆனால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா.
விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை 2 கட்டங்களாக நடத்த திட்டம். மேலும் அடுத்த மாதம் 22ஆம் தேதி போட்டிகள் தொடங்கும் என அறிவிப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் முகேஷ்குமார் அணியில் சேர்ப்பு.