தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல். வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தளங்களில் குவிந்த மக்கள்.
அச்சம் தவிர்த்த காளையர், அடங்க மறுத்த காளைகள். ஆர்ப்பரித்த ரசிகர்கள் மத்தியில் அரங்கேறிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 17 காளைகளை அடக்கி கார் வென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்.
13 காளைகளை அடக்கிய ரஞ்சித்திற்கு இரண்டாமிடம்; 2 பேர் மூன்றாமிடம் பிடித்து அசத்தல்.
பாலமேட்டில் தயார் நிலையில் தமிழர் தம் வீர விளையாட்டுக் களம். ஆயிரம் காளைகள்,700 வீரர்களுக்கு அனுமதி.
மகரஜோதியாக காட்சியளித்த சபரிமலை ஐயப்பன். சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு.
நீலகிரியில் மின்கம்பம் மீது மோதிய பேருந்து. மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழப்பு
2024 நாடாளுமன்றத் தேர்தல். சுவர் விளம்பரப் பரப்புரையைத் தொடங்கி பாரதிய ஜனதா.
மகராஷ்ட்ர பேரவைத் தலைவர் முடிவுக்கு எதிர்ப்பு. உச்ச நீதிமன்றத்தை நாடிய உத்தவ் தாக்கரே அணி.
விமானத்தின் அருகில் அமர்ந்து உணவருந்திய பயணிகள். 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட விமானம் வேறு இடத்திற்கு திருப்பிவிடப்பட்டதால் அதிருப்தி.
விமானப் புறப்பாடு தாமதமானால் பின்பற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகள். விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தல்.
ஈரான் அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு. வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு.
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு. இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க முடிவு.
ஏமன் அருகே அமெரிக்க சரக்குக் கப்பல் மீது தாக்குதல். ஹூதி அமைப்பினர் தாக்கியதாக தகவல்.
இஸ்ரேல் தாக்குதலில் பிணைக்கைதிகள் இருவர் உயிரிழந்ததாக ஹமாஸ் குற்றச்சாட்டு. தாக்குதலைத் தவிர்க்க பொய்யானத் தகவலைக் கூறுவதாக இஸ்ரேல் பதில்.
ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை. தீக்கிரையான கட்டடங்கள்.