”அமைதிக்கு திரும்புவோம்” இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான தினம்!

பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பகமையை விட்டு அமைதியை நிலைநாட்ட தாஷ்கண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் .
லால் பகதூர் சாஸ்திரி
லால் பகதூர் சாஸ்திரிgoogle
Published on

இன்றைய நாள் ...

பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பகமையை விட்டு அமைதியை நிலைநாட்ட தாஷ்கண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் .

தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்

ஆங்கிலேயருடன் போரிட்டு சுதந்திரத்தை பெற்றதையடுத்து, சுதந்திரத்திற்கு பின் இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரிவினையால் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பகமை கொண்டு சண்டையிட்டு வந்தன. இதனால் உலகபொருளாதாரம் , உலக அமைதி சரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பரம் சண்டையை நிறுத்தி, ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்று நினைத்த சோவியத் யூனியனும், அமெரிக்காவும், அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடமும், பாகிஸ்தான் குடியரசுத்தலைவர் அயூப்கானிடமும் பரஸ்பரம் பேசி ஒரு ஒப்பந்தம் வைத்துக்கொள்ள வலியுறுத்தினர்.

அயூப்கான்,லால்பகதூர் சாஸ்திரி பேச்சுவார்த்தை
அயூப்கான்,லால்பகதூர் சாஸ்திரி பேச்சுவார்த்தை

லால்பகதூர் சாஸ்திரியும், அயுப்கானும் பரஸ்பரம் அமைதியை விரும்பியதால் ஒப்பந்தம் வைத்துக்கொள்ள தயாரானார்கள்.

தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான இடம்

உசுபெகிஸ்தானில் தாஷ்கண்ட் என்ற நகரில், சோவியத் யூனியனைச் சேர்ந்த அலெக்ஸி கோசிகின் தலைமையில் 1966 ஜனவரி 10ம் தேதி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா முன்னிலையில் இந்தியா சார்பில் லால்பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் சார்பில் அயுப்கானும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர். இதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம்.

தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை விரும்பாத நாடுகள்

ஆனால் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் போராளிகள் விரும்பவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் இருநாடுகளுக்குள்ளும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது.

லால் பகதூர் சாஸ்திரி
ஜனவரி 9, 1921.. புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்!!

தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த அயுப்கானின் செல்வாக்கு பாகிஸ்தானில் சரிந்தது. தாஷ்கண்ட் சென்ற இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி எதிர்பாராதவிதமாக தாஷ்கண்டில் உயிரிழந்தார். அதனால் தாஷ்கண்ட் ஒப்பந்தமானது தோல்வியை தழுவியது என்றே சொல்லலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தான் - இந்தியா இடையேயான தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com