தனக்கு கிடைக்கும் இரையை புலி என்றாவது புறக்கணிக்குமா? கண் எதிரே இரை இருந்தாலும் அதைப் புறக்கணித்துவிட்டு ஒரு புலி செல்லும் என நாம் எப்போதாவது யோசித்ததுண்டா?
ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. அவர் பகிர்ந்த வீடியோவில், ‘ இரண்டு மான்களை இருப்பதை கவனித்துவிட்டு, சாதாரணமாக ஒரு புலி கடந்து செல்கிறது. கடந்த சென்ற புலிக்குப் பின்னால் அந்த இரண்டு மான்களுக்கும் சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு வேறு பக்கம் செல்கிறன’
இந்த வீடியோவை பகிர்ந்த ரமேஷ் பாண்டே,’ தனது இரையைக் கொல்வதில் புலி சிக்கனமாக இருக்கிறது. உணவு தேவை ஏற்படாத நேரங்களில் புலி மற்ற உயிர்களைக் கொலை செய்வதில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தொடர்ந்து, பலர் தங்களது தெரிந்த விபரங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ‘’வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை தான் தனது தேவையான இரையைப் புலி வேட்டையாடும். சூழலியல் சமநிலையைச் சரியாக வைத்துக்கொள்ள மனிதர்களை விட விலங்குகள் தான் தாமாகவே செயலாற்றும் ’’ போன்று பலர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.