”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்

”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்
”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்
Published on

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சி 115 இடங்களிலும் அதிமுக 73 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com