“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி

“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி
“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி
Published on

வேலை வாய்ப்பின்மையை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பதை தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.  

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வபோது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், தற்போது வேலை வாய்ப்பின்மையை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். 

ஆனால் தேர்தலுக்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடக்கூடிய நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். கிட்டதட்ட 6.1 சதவீதம் வேலைவாய்ப்பு இல்லா சூழ்நிலையை அவர்கள் வெற்றிகரமாக  உருவாக்கியிருக்கிறார்கள். 

ஊராட்சி சபை கூட்டம் மூலம் மக்களை நேரடியாக சந்தித்தபோது படித்த இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலையில்லா சூழ்நிலை நிலவுவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை கொண்டு வந்து, தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கி படித்தவர்களுக்கு, இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய நிலையை திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com