திருவாரூர்: உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ 10.32 லட்சம் பணம் பறிமுதல்

திருவாரூர்: உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ 10.32 லட்சம் பணம் பறிமுதல்
திருவாரூர்: உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ 10.32 லட்சம் பணம் பறிமுதல்
Published on

பேரளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

தமிழத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 33 பறக்கும் படை அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த் முகமது இர்ஃபான் (22) நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

ஆப்போது உரிய ஆவணமின்றி 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரஞ்சோதி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவானந்தம் ஆகியோர் பணத்தை கைப்பற்றி பேரளம் பேரூராட்சியில் ஒப்படைத்தனர் இதைத் தொடர்ந்து பேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் கைப்பற்றப்பட்ட பணத்தை நன்னிலம் துணை கருவூலத்தில் ஒப்படைத்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com