திருத்தணி: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சிகிச்சை-தலைமை மருத்துவர்

திருத்தணி: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சிகிச்சை-தலைமை மருத்துவர்
திருத்தணி: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சிகிச்சை-தலைமை மருத்துவர்
Published on

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் மற்றம் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இதுதவிர, கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டடத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. இது குறித்து திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி கூறுகையில், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 

ஆனால் சில நோயாளிகள் தற்போது முகக்கவசம் அணியாமல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இனிவரும் நாட்களில் முகக்கவசம் அணியாமல் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. எனவே நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com