திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்
Published on

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் ஏதும் உத்தரவு பிறப்பிக்கவில்லையே என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.

ஆனால், சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சிலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப் படாது எனத் தெரிவித்தது.

இதையடுத்து தேர்தல் வழக்கு நிலுவை என காரணம் காட்டி தேதி அறிவிக்கப்படவில்லை எனவும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி திமுகவை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் 

தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற உத்தரவு ஏதும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதி அது தேர்தல் ஆணையத்தின் முடிவு எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com