சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசே மேல்முறையீடு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கர் ஆணவக் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசே மேல்முறையீடு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவுசல்யாவின் தாய், தாய்மாமன் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் மேல்முறையீட்டில் மற்றவர்களும் தப்ப வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன் என ஏற்கனவே கவுசல்யா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.