2 லட்சம் கடனுக்காக சொகுசு காரை திருடிய காவலாளி: காட்டிக் கொடுத்த சிசிடிவி

2 லட்சம் கடனுக்காக சொகுசு காரை திருடிய காவலாளி: காட்டிக் கொடுத்த சிசிடிவி
2 லட்சம் கடனுக்காக சொகுசு காரை திருடிய காவலாளி: காட்டிக் கொடுத்த சிசிடிவி
Published on

சென்னையில், கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிச் சென்ற காவலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ளது. பாலசுப்பிரமணியன் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றுபவர் விஜய்ராம். இவரை பாலசுப்ரமணியன் அவரது கார் ஓட்டுனர் வராத சமயத்தில் சொகுசு காரை ஓட்ட பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி பாலசுப்ரமணியனின் கார் திருடுபோனது. இதனையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்ததில், காரை திருடியது காவலாளி விஜய்ராம் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்காக, காரை விற்க முடிவு செய்ததாக காவலாளி விஜய்ராம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com