"காங்கிரஸ், திமுக பெண்களை மதிப்பதில்லை என பிரதமர் பேசியது வரலாற்றுப் பிழை" -கே.எஸ்.அழகிரி

"காங்கிரஸ், திமுக பெண்களை மதிப்பதில்லை என பிரதமர் பேசியது வரலாற்றுப் பிழை" -கே.எஸ்.அழகிரி
"காங்கிரஸ், திமுக பெண்களை மதிப்பதில்லை என பிரதமர் பேசியது வரலாற்றுப் பிழை" -கே.எஸ்.அழகிரி
Published on

காங்கிரஸ், திமுக பெண்களை மதிப்பதில்லை என தாராபுரத்தில் பிரதமர் பேசியது வரலாற்றுப் பிழை என உடுமலையில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பெதப்பம்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...

தாராபுரம் வந்த பிரதமர் மோடி காங்கிரஸ், திமுக பெண்களை மதிக்க மாட்டார்கள் என பேசியுள்ளார். எப்போது நமது இந்திய பிரதமர்கள் தேர்தல் பரப்புரைக்கு வந்தாலும் அல்லது வேறு பொது நிகழ்வுக்கு வந்தாலும் அவர்கள் உள்ளூர் அரசியலை பேசமாட்டார்கள். நாட்டின் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி,அயலுறவு கொள்கை போன்று விசயங்களை பேசுவார்களே தவிர இதுபோன்ற விசயங்களை பேசமட்டார்கள்.

காங்கிரஸ், திமுக பெண்களை மதிப்பதில்லை என சொல்கிறார்கள். உலக அளவில் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. இதில் அதிகமான பெண் தலைவிகளை உருவாக்கியுள்ளோம். அதே பாஜகவை பார்த்து கேட்கிறேன். இந்த 70 ஆண்டுகளில் எந்த பெண்ணையாவது அகில இந்திய பொறுப்பில் உருவாக்கி இருக்கிறீர்களா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதேவேளையில் கருணாநிதி அவர்கள் முதல்மைச்சராக இருந்த போதுதான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி சட்டம் இயற்றினார். பிரதமர் மோடிக்கு இது தெரியாது. ஒரு பிரதமர் அப்படி பேசக்கூடாது எனவும் பிரதமர் அவ்வாறு கருத்து வைப்பது எவ்வளவு பெரிய பிழை என உணரவேண்டும் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com