டிரெண்டிங்
தென்கொரிய யூடியூபரிடம் பணம் வசூல் செய்த போக்குவரத்து காவலர் பணி இடை நீக்கம்; காரணம் இதுதான்!
போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி தென் கொரிய யூடியூபரிடம் காவலர் பெற்ற தொகைக்கு முறையாக ரசீது வழங்கப்படவில்லை
தலைநகர் டெல்லியில் தென் கொரிய யூடியூபரிடம் பணம் வசூலித்த போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி தென் கொரிய யூடியூபரிடம் காவலர் மகேஷ்சந்த், 5 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்.
ஆனால், அதற்கான ரசீது வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தென் கொரிய யூடியூபர்ட்விட்டரில் வெளியிட, டெல்லி காவல்துறை முகேஷ் சந்த் மீதுநடவடிக்கை எடுத்து அவரை பணியிடை
நீக்கம் செய்துள்ளது.