சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்
சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்
Published on

சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ. செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி பார்த்த மருத்துவர்.

சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பாலசுந்தரம் (40), கிளினர் பார்த்திபன் (37) இருவரும் சென்னையில் இருந்து லோடு ஆட்டோ மூலம் சரக்குகளை கிருஷ்ணகிரிக்கு எடுத்து சென்றனர். சரக்கினை இறக்கிவிட்டு சென்னை திரும்புகையில், வேலூர் அடுத்த மோட்டூர் அருகே வரும் போது நிலை தடுமாறிய லோடு வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 இதில் ஓட்டுனர் பாலசுந்தரம், கிளினர் பார்த்திபன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தவித்துள்ளனர். அச்சமையம் சென்னையைச் சேர்ந்த முஸ்தபா அபுதாசிர் என்ற மருத்துவர் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது வழியில் விபத்து ஏற்பட்டதை அறிந்து உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவருக்கும் முதலுதவி அளித்துள்ளார். 

மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடலில் இருந்து ரத்தம் அதிகம் வெளியேராதவாறு சிகிச்சை அளித்து 108 ஆம்புலென்ஸை வரவைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளார். மருத்துவரின் இச்செயல் அங்கிருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஓட்டுனர் பாலசுந்தரம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். கிளினர் பார்த்திபன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com