ஐபிஎல்லில் வியக்கத்தக்க பல சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் அதே ஐபிஎல்லில் ஐந்து மோசமான சாதனைகள் இன்று வரை வீரர்களாலும், ரசிகர்களாலும் மறக்க முடியாத கசப்பான நினைவுகளாக உள்ளன. அவை என்னென்ன என பார்போம்.
ஐபிஎல்லின் 5 கசப்பான சாதனைகள்..
#5: ஐபிஎல்லில் ஒரு வீரர் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள்
கொல்கத்தாவுக்கு எதிராக 4 ஓவர்களை வீசி 70 ரன்களை வாரி வழங்கினார் ஐதராபாத் அணியின் பசில் தம்பி
#4: அதிக உதிரி ரன்களை வழங்கிய அணி
2008இல் கொல்கத்தாவுக்கு எதிராக 15 WIDES உட்பட 23 உதிரிகளை வாரி வழங்கியது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்
#3: ஐபிஎல்லில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற அணி
2017இல் மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டடத்தில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது டெல்லி டேர் டெவில்ஸ்
#2: ஐபிஎல்லில் 'ஹாட்ரிக் டக் அவுட்' ஆன வீரர்கள்
2014இல் கவுதம் காம்பீரும், 2019 இல் ஆஷ்டன் டேர்னரும் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர்
#1: குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி
2017 இல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு அணி.