வெறிச்சோடி காணப்படும் டாப்சிலிப்.. கோரிக்கை விடுக்கும் சுற்றுலா பயணிகள்

வெறிச்சோடி காணப்படும் டாப்சிலிப்.. கோரிக்கை விடுக்கும் சுற்றுலா பயணிகள்
வெறிச்சோடி காணப்படும் டாப்சிலிப்.. கோரிக்கை விடுக்கும் சுற்றுலா பயணிகள்
Published on

பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மூலிகை மரங்கள், வனவிலங்குகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் டாப்சிலிப் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். கொரானா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை செய்யபட்டுள்ளது, இதானல் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.


இந்நிலையில், பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் தற்போது பச்சைபசேல் என சோலைவனமாக மாறியுள்ளது. டாப்சிலிப் செல்லும் வனச்சாலையின் இருபுறமும் வான்உயர்ந்த தேக்குமரங்களும், முலிகைமரங்களும் கண்கொள்ள காட்சியாக உள்ளது.


மேலும் டாப்சிலிபில் உள்ள புல்மேடு மற்றும் யானை சவாரி செய்யும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது, வாகன போக்குவரத்து குறைந்து, வனத்துறையினர் மற்றும் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மட்டுமே வந்து செல்வதால் காட்டுமாடு, காட்டுயானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.


கொரானா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதால் டாப்சிலிப் வனப்பகுதியின் குளிர்ச்சியையும் அழகையும் கண்டுகழிக்கும் வாய்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு பறிபோயுள்ளது. கொரானா காலத்தில் வீடு வேலை என வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ள மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு சென்றுவர அனமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com