ஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி

ஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி
ஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி
Published on

திருவள்ளூரில் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றன. இதனிடையே தமிழகத்தில் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். 

இந்நிலையில், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் கடந்த சில தினங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டியதால் தனியார் மருத்துவமனை அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com