பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இயற்கை அரண் மிகப் பெரிய பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நீர் ஆதாரம் பெருகும். விவசாயம் செழிக்கும். குடிநீர் பிரச்சினை தீரும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
எனவே பாலாற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறும் தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.