மதுரை: அழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: அழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை: அழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கள்ளழகர் திருக்கோயிலில்,  ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய 0 நாட்கள் விழாவில் தினமும் காலை சுந்தராஜபெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் தங்க பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களில், திருக்கோயில் உட்பிரகாரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவிற்கேற்ப அப்போது முடிவெடுக்கப்படும் என திருக்கோயில் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடிப் பெருந்திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், திருக்கோயில் பட்டர்கள், திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மட்டும் கலந்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com