திமுகவின் தோல்வி 2ஜி தீர்ப்பை மக்கள் ஏற்காததைக் காட்டுகிறது: தம்பிதுரை

திமுகவின் தோல்வி 2ஜி தீர்ப்பை மக்கள் ஏற்காததைக் காட்டுகிறது: தம்பிதுரை
திமுகவின் தோல்வி 2ஜி தீர்ப்பை மக்கள் ஏற்காததைக் காட்டுகிறது: தம்பிதுரை
Published on

ஆர்.கே.நகர் என்பது அதிமுக கோட்டை அங்கு திமுக வெற்றி பெற முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 13வது சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 13வது சுற்றுப்படி டிடிவி தினகரன் 64,627 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 33,436 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். திமுக வேட்பாளர் 17,140 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,871 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 837 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவிற்கு 1,537 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “திமுகவின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 2ஜி தீர்ப்பு வெளியானது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு கூட தீர்ப்பை அறிவித்திருக்கலாம். அதனால் 2ஜி தீர்ப்புக்கு ஆர்.கே.நகர் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். திமுக 2ஜி விவகாரத்தில் பெரும் ஊழல் செய்திருப்பது உறுதியான ஒன்றுதான். ஆகவே தமிழக மக்கள் அந்த எண்ணத்தில்தான் வாக்களித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் ஆர்.கே.நகர் என்பது அதிமுக கோட்டை அங்கு திமுக வெற்றி பெற முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com