தென்காசி:எழுதப் படிக்கத் தெரியாத எங்களுக்கு தேர்தல் அலுவலர் பணியா? அதிர்ச்சியில் ஊழியர்கள்

தென்காசி:எழுதப் படிக்கத் தெரியாத எங்களுக்கு தேர்தல் அலுவலர் பணியா? அதிர்ச்சியில் ஊழியர்கள்
தென்காசி:எழுதப் படிக்கத் தெரியாத எங்களுக்கு தேர்தல் அலுவலர் பணியா? அதிர்ச்சியில் ஊழியர்கள்
Published on

சங்கரன்கோவிலில் எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக்கூட சமையல் பெண் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி ஆணை வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அனைத்து நிலை பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பள்ளிக்கூட சத்துணவு சமையல் உதவியாளர்கள் 50 பேர் மற்றும் சமையலர் 5 பேர் என மொத்தம் 55 பேருக்கு வாக்குச் சாவடி அலுவலர் நிலை 2-க்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

சமையல் பெண் உதவியாளர்களில் சிலர் கல்வியறிவு இல்லாதவர்கள். சமையல் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஆணை வழங்கப்பட்ட தகவல் தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்து செய்தவதறியாது திகைத்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சமையல் உதவியாளர்கள் தேர்தல் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு படிக்கத் தெரியாது எனத் தெரிவித்தனர். அப்போது அவர்கள் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பட்டியல் வந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், இந்த பணியில் இருந்து தங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com