பாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்?

பாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்?
பாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்?
Published on

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் கூறியுள்ளார்.

2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பட்ஜெட் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்த வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சிகள் பட்ஜெட் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளன. 

தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவட் விமர்சித்துள்ளார். விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், கண் துடைப்பு பட்ஜெட்டாகவே உள்ளது என்றும் அவர் கூறினார். அதேபோல், ஆந்திர மாநிலம் பயனடையும் வகையிலான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலாவரம் அணைக்கட்டு, அமராவதி தலைநகருக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாஜக உடனான உறவு குறித்து ஆலோசிக்க எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மூன்று விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முடிந்தவரை பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை தொடரச் செய்வது, எம்.பி.க்களை ராஜினாமா செய்வது, கூட்டணியை முறித்துக் கொள்வது ஆகிய மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றினை தெலுங்கு தேசம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com