இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் - தமிழிசை

இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் - தமிழிசை
இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் - தமிழிசை
Published on

நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமக 7 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் தேமுதிக 4 தொகுதிகளிலும் தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஆனால் பாஜக தரப்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “உத்தேச பட்டியல் தற்போது உறுதியாகியுள்ளது. பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மத்திய தேர்தல் குழு இன்று வெளியிடும். வானத்தில் கோட்டை கட்டுவது போல் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக திமுக என்ன செய்தது. பாஜக ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை மீண்டும் செய்வோம் என வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

திமுகவின் அறிக்கையை விமர்சனம் செய்ய எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்று பேசும் ஸ்டாலின் கட்சியில் இடம் ஒதுக்கீடு தருவதில்லை. 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னதை அவர்கள் ஆட்சியில் இருந்த வரை அவர்கள் செய்யவில்லை. கட்சிகள் வாங்கிய ஓட்டு வங்கியை பொறுத்தே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நீட் தேர்வினால் தமிழக மாணவர் பயன்பெற ஆரம்பித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com