சர்ச்சைக்குரிய சேலம் கச்சராயன் ஏரியில் இன்றுமுதல் வண்டல் மண் எடுக்க அனுமதியில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கச்சராயன் ஏரியிலிருந்து ஆளுங்கட்சியினர் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 14-ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு மட்டுமே கச்சராயன் ஏரியிலிருந்து வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த கெடு இன்றுடன் முடிவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று முதல் வண்டல் மண் எடுக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டது. மண் எடுக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.