“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார் 

“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார் 
“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார் 
Published on

ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என சீமான் கூறியது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி மரணத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் இரண்டு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. எத்தகைய கோட்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு அமைதியைக் குலைகின்ற வகையில் பரப்புரையினை செய்திருக்கிறார்.

நாங்கள்தான் ராஜிவ் காந்தியை கொன்று புதைத்தோம் என்று சொல்லி இருக்கிறார். இதனைக் கேட்டு எங்கள் தொண்டர்கள் வெகுண்டு உள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறை இயக்குனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளேன். எனவே தேர்தல் ஆணையம் இடைதேர்தல் நடக்கும் இரண்டு தொகுதியிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். சீமான் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

ராஜிவ்காந்தி கொலை செய்த வழக்கில் ஏழு பேர் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜிவ்காந்தி கொலைவழக்கு குறித்து சீமான் கூறி இருக்கும் கருத்து நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com