தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில், முன்னால் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரியின் மீது, பின்னால் வந்த கண்டைனர் லாரிமோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ஓட்டுநரை ஒருமணிநேரம் போராடி உயிருடன், தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில், மதுரவாயிலை சேர்ந்த பெருமாள் என்பவர் கண்டைனர் லாரியை எடுத்துக் கொண்டு ஒரகடத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரவாயில் பைபாஸ் சாலை அனகாபுத்தூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த 40அடி கண்டைனர் லாரிமீது தூக்க கலக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் ஓட்டுநர் பெருமாளின் கால் அவரது இருக்கைக்கு அடியில் மாட்டிக் கொண்டதால் வெளியே வர முடியாமல் வலியால் துடித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் லாரியில் சிக்கித்தவித்த ஒட்டுநரை ஒரு மணிநேரம் போராடி மீட்டனர். இந்த விபத்தால் மதுரவாயில் தாம்பரம் மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.