மாநிலங்களவையில் நேற்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அதன்பின் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே நேற்று அமளியில் ஈடுபட்ட எட்டு எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் பெயர் விவரங்கள்...
டெரிக் ஓப்ரையன்(அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் சிங்(ஆம் ஆத்மி), ராஜீவ் சதவ்( காங்கிரஸ்), கே.கே. ராகேஷ்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சையத் நாசிர் உசேன்( காங்கிரஸ்), ரிபுன் போரா( காங்கிரஸ்), டோலா சென்(அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்), எளமாறன் கரீம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகிய எட்டுப்பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எட்டு பேர் சஸ்பெண்ட்