நடிகை வனிதா புகாரில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவி என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா தேவியை விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக பெண் காவல் ஆய்வாளர அழைத்துச் சென்றார். அங்கு சூர்யா தேவிக்கு மட்டுமல்லாமல் ஆய்வாளருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா உறுதியானதை அடுத்து சூர்யா தேவி தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சூர்யா தேவி கைது செய்யப்பட்டபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல் நிலையத்தில் உடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.