மீண்டும் சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு.. சிக்கலில் சுனில் நரேன்?

மீண்டும் சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு.. சிக்கலில் சுனில் நரேன்?
மீண்டும் சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு.. சிக்கலில் சுனில் நரேன்?
Published on
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனின் பந்துவீச்சு மீண்டும் புகாருக்கு உள்ளாகியுள்ளது.
 
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இப்போட்டியில் கொல்கத்தா அணியின் பவுலர் சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
 
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசியின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக, கள நடுவர்கள் ஐபிஎல் அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.
 
 
இந்த புகாரால் தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசத் தடையில்லை. ஒருவேளை மீண்டும் நடுவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார். அதேநேரத்தில் அவரது அணிக்காக அவர் பேட்டிங் செய்யலாம்.
 
பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வு குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.
 
சுனில் நரேன் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தனது பவுலிங் முறையால் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com