டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சுனந்தா புஷ்கர் வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் எம்பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர். டெல்லி போலீசார் சசி தரூர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரவு 498-A மனைவியை கொடுமை படுத்தியதாகவும் மற்றும் பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருந்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் சசி தரூர் இந்த வழக்கில் ஜாமின் பெற்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை செஷ்னஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. ஏனென்றால், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 306ன் கீழ் வரும் வழக்குள் அனைத்தையும் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரிக்கும். இதனால் இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் பிப்ரவரி மாதம் 21 தேதி முதல் விசாரிப்பார் என்று தெரிவித்தது.
மேலும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் எனக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கிற்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.