இன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன?

இன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன?

இன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன?
Published on

இன்றைய போட்டியில் களம் காணவுள்ள ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளின் பலம் பலவீனங்கள்

பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நடப்பு சீசனை தோல்வியுடனே தொடங்கியுள்ளன.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே முதல் போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. கேப்டன் கார்த்திக் மற்றும் நிதிஷ் ரானா மட்டும் முதல் போட்டியில் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஆல்ரவுண்டர்கள் ரசல் மற்றும் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் ஃபார்முக்கு வரும் பட்சத்தில் அணிக்கு அது பெரும் பலம். பந்துவீச்சில் ஷிவம் மாவி, சுனில் நரைன் நம்பிக்கையளிக்கின்றனர்.

ஐதராபாத் அணிக்கு பேட்டிங்கில் பேர்ஸ்ட்டோவ், மணிஷ் பாண்டேவின் ஃபார்ம் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கேப்டன் வார்னர் முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.

விஜய் சங்கர், பிரியம் கார்க் முதல் போட்டியில் சோபிக்காதது அணிக்கு பின்னடைவே. மார்ஸ் காயத்தால் விலகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்தை நபி அல்லது ஃபேபியன் ஆலன் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் பேட்டிங்கில் வலுசேர்க்க வில்லியம்சன் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

பந்து வீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் அணிக்கு தூணாக உள்ளனர். முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் கணிக்கப்படுகிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com