தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் ஓட்டு போடுவதில்லை !

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் ஓட்டு போடுவதில்லை !
தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் ஓட்டு போடுவதில்லை !
Published on

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் மொத்த வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேர் வாக்களிப்பதில்லை என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் கடந்த 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கோடியே 40 லட்சம் பேரும், மக்களவைத் தேர்தலில் 1.32 கோடி பேரும் வாக்களிக்கவில்லை. 2001ல் 1.94 கோடி பேரும் வாக்களிக்கவில்லை. 2004 மக்களவைத் தேர்தலில் 1.85 கோடி பேரும், 2006 பேரவைத் தேர்தலில் 1.35 கோடி பேரும் ஓட்டுப் போடவில்லை. 2011 சட்ட‌ப்பேரவைத் தேர்தலில் 1.03 கோடி பேரும், 2014 மக்களவைத் தேர்தலில் 1.44 கோடி வாக்காளர்கள் வாக்குச்சாவடி பக்கம் செல்லவில்லை என தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வெளியூர் பயணம், வேலைநிமித்தமாக வெளியூர் வசிப்பு ஆகிய காரணங்கள் வாக்குப்பதிவு குறைவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. விடுமுறையில் வேறுபணியை திட்டமிடல், உடல்நலக் குறைவு ஆகியவையும் வாக்களிக்கத் தவறுவதில் அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. இதுபோல, வாக்களிக்கத் தவறுவோரில் படித்தவர்கள் அதிகம் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதை தேர்தல் ஆணையமும், புதிய தலைமுறை போன்ற பொறுப்புள்ள ஊடகங்களும் பரப்புரை செய்து வரும் நிலையில், வரும் தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என நம்புவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com