ஆளுநரை சந்தித்தது ஏன்?: ஸ்டாலின் பேட்டி

ஆளுநரை சந்தித்தது ஏன்?: ஸ்டாலின் பேட்டி
ஆளுநரை சந்தித்தது ஏன்?: ஸ்டாலின் பேட்டி
Published on

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி திமுக கொடுத்த மனு பிரதமருக்கு அனுப்படும் என ஆளுநர் கூறியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

ஒகி புயலால் கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடந்த 4ஆம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் சோகத்தில் இருந்த மீனவ குடுமபங்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்திடம், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் மனு அளித்தனர். அப்போது, ஸ்டாலின் உடன் எம்.பி.கனிமொழி, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிம் பேசிய ஸ்டாலின், “ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்ட பிரச்னைகளை ஆளுநரிடம் விளக்கினோம். மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் புயல் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. காணாமல் போன மீனவர்கள் தொடர்பான கணக்குகள் அரசிடம் முறையாக இல்லை. அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கூட்டுவது போல் குமரியில் கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் நடக்கும் நிவாரண பணிகளில் 10% பணியிலாவது தமிழக அரசு ஈடுபட வேண்டும். கன்னியாகுமரி புயல் பாதிப்பு குறித்து திமுக தந்த கோரிக்கை மனுவை பிரதருக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசவில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com