எட்டிப்பிடிக்க தேவை 0.13 மீட்டர்தான்: ஒலிம்பிக் நீளம்தாண்டுதலில் நம்பிக்கைதரும் ஸ்ரீசங்கர்

எட்டிப்பிடிக்க தேவை 0.13 மீட்டர்தான்: ஒலிம்பிக் நீளம்தாண்டுதலில் நம்பிக்கைதரும் ஸ்ரீசங்கர்
எட்டிப்பிடிக்க தேவை 0.13 மீட்டர்தான்: ஒலிம்பிக் நீளம்தாண்டுதலில் நம்பிக்கைதரும் ஸ்ரீசங்கர்
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதலில், பதக்கம் பெறத் துடிக்கும் கேரள இளைஞர் ஸ்ரீசங்கர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் தங்கம் வென்றதில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி.உஷா 400 மீட்டர் தடை ஓட்டப்பிரிவில் 4-வதாக வந்து, நூறில் ஒரு விநாடி வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்தார். அஞ்சு பாபி ஜார்ஜ் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் 6.83 மீட்டர் தூரம் தாண்டி, 5-வது இடம்பிடித்தார்.

இந்த இரு கேரளா வீராங்கனைகளின் பதக்க கனவை நிறைவேற்ற, அதே கேரளாவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நீளம் தாண்டுதல் பிரிவில் தகுதிப் பெற்றுள்ளார் ஸ்ரீசங்கர்.

முதலில் 100 மீட்ட ஓட்டத்தில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீசங்கர், பின்னர் தனது கவனத்தை நீளம் தாண்டுலுக்கு மாற்றினார். 2018-ம் ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 7.99 மீட்டர் தூரம் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஸ்ரீசங்கர்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தருவார் என எதிர்பார்த்த நிலையில், குடல் வால் அலற்சி நோயால் எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் தவித்தார். எனினும் விடாமுயற்சியால் மீண்டும் களத்துக்கு வந்த அவர், அதே ஆண்டில் ஜப்பானில் நடைபெற்ற ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலம் வென்று அசத்தினார்.

கேரளாவை மழை புரட்டிப்போட்ட நிலையில், கடும் நெருக்கடிக்கு இடையே, 2018-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 6-வது இடம்பிடித்தார்.

2020 ஆம் ஆண்டு அனைத்து தடகள வீரர்களையும் போன்று ஸ்ரீசங்கரும், கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டார். தெற்காசிய போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளி வென்ற தந்தை முரளியின், மேற்பார்வையில் பயிற்சியை தொடங்கிய ஸ்ரீசங்கர், இந்த ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில், 8.26 மீட்டர் தூரம் தாண்டி டோக்கியோ ஒலிம்பிக்கு தகுதி பெற்றார். தற்போதைய நிலையில், இது உலக அளவில் 11-வது இடமாகும்.

உலக அளவில் தற்போது கிரீஸ் வீரர் மில்டியாடிஸ் 8.60 மீட்டர் தூரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹாரிசன் 8.44 மீட்டருடன் 2-ம் இடத்தில் உள்ளார். 8.39 மீட்டர் தூரத்துடன் அமெரிக்கா மற்றும் க்யூபா வீரர்கள் 3-வது இடத்தில் உள்ளனர். இதை எட்டிப்பிடிக்க ஸ்ரீசங்கருக்கு இன்னும் 0.13 மீட்டர் தேவை.

புலிக்கு பிறந்தது பூனையல்ல என்பதை நிரூபித்து ஸ்ரீசங்கர் தடகள பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க மேடை ஏறுவார் என நம்புவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com