நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 12-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் ஆகியோருக்கு நாளை இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை வழங்குவுள்ளார். இதற்கிடையில், முதலமைச்சர் பேசும் அன்றைய தினமே ஸ்டாலின் பேச அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அதனை சபாநாயகர் நிராகரித்ததால் அலுவல்ஆய்வுக் கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.