மக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்
மக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்
Published on

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் இறுதி கட்ட தேர்தல் ஆயத்தப் பணியை மேற்கொண்டு வருவதாகவும் மற்றும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர்களையும், உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் 2014ஆம் ஆண்டு போட்டியிட்ட அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபர்ரூகாபாத் தொகுதியிலும், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பரத்சின்ஹ் எம். சோலான்கி ஆனந்த் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com