"ஒரு டக் அவுட்டினால் மோசமான பேட்ஸ்மேனாகிவிட முடியாது" - தினேஷ் கார்த்திக் !

"ஒரு டக் அவுட்டினால் மோசமான பேட்ஸ்மேனாகிவிட முடியாது" - தினேஷ் கார்த்திக் !
"ஒரு டக் அவுட்டினால் மோசமான பேட்ஸ்மேனாகிவிட முடியாது" - தினேஷ் கார்த்திக் !
Published on

ஒரு முறை டக் அவுட்டானால் அவர் மோசமான பேட்ஸ்மேனாக கருத முடியாது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் கொல்கத்தாவின் சுப்மன் கில் 70 ரன்களுடனும், மோர்கன் 42 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் "சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். ஒரு இளம் வீரர் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் விளையாட வேண்டும் அதனை சுப்மன் கில் சிறப்பாகவே விளையாடினார். இந்தத் தொடரில் முதல் வெற்றியை பெறுவது மிகவும் மகிழ்ச்சி. தொடர்ச்சியாக போட்டிகளில் வெற்றிப் பெறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

"டக் அவுட்" குறித்துப் பேசிய தினேஷ் கார்த்திக் "ஒரு போட்டியில் டக் அவுட்டானால் அவர் மோசமான வீரர் இல்லை. அதேபோல ஒரு போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனது பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com