தீபிகாவுக்கு சித்தராமையா ஆதரவு: எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என ட்வீட்

தீபிகாவுக்கு சித்தராமையா ஆதரவு: எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என ட்வீட்
தீபிகாவுக்கு சித்தராமையா ஆதரவு: எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என ட்வீட்
Published on

பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதால் அவருக்கு ஆதரவாகவும், அவரின் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று பின்னணி கொண்ட பத்மாவதி என்ற திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராணி பத்மாவதி குறித்து தவறுதலான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக, வலதுசாரிகள் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்து பாஜக தலைவர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் தீபிகாவை உயிரோடு எரித்தால் ரூ.1 கோடி பரிசு என்று அகில பாரதிய சத்ரிய மகாசபா அறிவித்தது. இந்த அச்சுறுத்தலால் தீபீகாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்  பாரதிய ஜனதாவின் வெறுப்பு கலாச்சாரத்தை தான் எதிர்ப்பதாகவும், தீபிகாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் தீபிகாவுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகை தீபிகா படுகோனே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் எப்போது பெங்களூரு வந்தாலும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சித்தராமையா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com