மத்திய அரசை விமர்சித்தால் வருமான வரி சோதனை நடத்துவதா? ஜெயா டி.வி வழக்கறிஞர் கேள்வி

மத்திய அரசை விமர்சித்தால் வருமான வரி சோதனை நடத்துவதா? ஜெயா டி.வி வழக்கறிஞர் கேள்வி
மத்திய அரசை விமர்சித்தால் வருமான வரி சோதனை நடத்துவதா? ஜெயா டி.வி வழக்கறிஞர் கேள்வி
Published on

மத்திய அரசை விமர்சிப்பவர்களின் வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக ஜெயா டி.வி வழக்கறிஞர் காசிநாதபாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

இன்று காலை முதல் ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், சசிகலாவின் உறவினர்களான  டிடிவி தினகரன், விவேக், உட்பட பலரின் வீடுகள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயா டி.வி வழக்கறிஞர் காசிநாதபாரதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்களின் நிறுவனங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடத்தப்படுவது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறினார். மேலும், வருமான வரி துறையினர் பாஜகவின் தனிப்பிரிவாக செயல்படுவதாகவும், தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கொள்ள முடியாதவர்கள், இதன் மூலம் மிரட்டி பார்ப்பதாக காசிநாதபாரதி தெரிவித்தார்.அதே போல் இந்த வருமான வரி சோதனையை தாங்கள் சட்டரீதியாக எதிர்க்கொள்வோம் என்றும் அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com