மீன் இறங்குதளம் உள்பட பல திட்டங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

மீன் இறங்குதளம் உள்பட பல திட்டங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
மீன் இறங்குதளம் உள்பட பல திட்டங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
Published on

திருச்சிராப்பள்ளி மாவ‌ட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூரில் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலும், டி.மாரியூரில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் இறங்குதளங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மதுரையில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி மையக் கட்டடம் உள்பட சென்னை, கோவை, தஞ்சை ஆகிய இடங்களில் 24 கோடியே 93 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், பாலகிருஷ்ண ரெட்டி, வெல்லமண்டி என்.நடராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com