செப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

திமுகவின் முப்பெரும் விழா வருகிற 15ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பிறந்த நாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. 
செப்டம்பர் 15ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க உள்ளேன். 16ஆம் தேதி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிக்க உள்ளேன். 

அரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநிலங்களை அடிமைப்படுத்துவதில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, அதை எதிர்க்கத் துணிவின்றி மாநில அரசு இருக்கிறது. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் மீட்க முடியாது. அதற்கான மாற்றத்துக்கு களமாக திமுகவின் முப்பெரும் விழா அமையும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com