முதல்வர் வேட்பாளர் யார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு

முதல்வர் வேட்பாளர் யார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு

முதல்வர் வேட்பாளர் யார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு
Published on

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 10ஆம் தேதி மதுரை பரவையில் அரசு சார்பில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தேர்தலை சந்தித்துவிட்டு பின்னர் முதல்வர் யார் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எடப்பாடியார் தான் முதலமைச்சர் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் முடிவு எடுத்துவிட்டு களத்தை சந்திக்க வேண்டும் என்றும் களத்தை சந்தித்துவிட்டு முடிவு எடுத்தால் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், முதல்வரை முன்னிறுத்தியே சட்டமன்றத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் ஈபிஎஸ் தலைமையிலும், ஒபிஎஸ் வழிகாட்டுதலிலும் தேர்தலை ஒன்றுமையுடன் சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com