போராட்டங்கள் கூடாது என்றால் போராட்டங்கள் இல்லாத நேர்மையான நல்லாட்சியை அரசு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் சிறை வளாகத்தில் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து என்ன பயன்? பிரதமர் தமிழகம் வந்த போது காவிரி விவகாரம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை. போராட்டங்களை அரசு ஒடுக்குகிறது, போராட வேண்டும் என்ற எண்ணமே வர கூடாது என அரசு நினைக்கிறது. பெரும் முதலாளிகளின் வேட்டைக்காடாக தமிழகம் மாறி வருகிறது. உணவுக்கும், நீருக்குமான போராட்டம், பொழுது போக்கிற்கானது அல்ல. போராட்டங்கள் கூடாது என்றால் போராட்டங்கள் இல்லாத நேர்மையான நல்லாட்சியை அரசு வழங்க வேண்டும். உரிமைகளுக்காக போராடும் கர்நாடகாவில் வழக்கு போடப்படுவதில்லை, தமிழகம் கர்நாடகத்திற்கான அரசா?” என்று கேள்விகளை அடுக்கினார்.