முக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் ?

முக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் ?
முக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் ?
Published on

நாடுமுழுவதும் நடைப்பெறும் இரண்டாம் கட்டதேர்தல் நிலவரம் குறித்து பார்க்கலாம்:

மொத்த வேட்பாளகள் மற்றும் வாக்காளர்கள்:

  • இந்தியாமுழுவதும் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மொத்தம் 1611 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்
  • பகுஜன்சமாஜ்-லிருந்து 79 வேட்பாளர்கள், காங்கிரஸ்-53 பாரதியஜனதா- 50 திமுக-23 அதிமுக- 21 இந்தியகம்யூனிஸ்ட்- 7 மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்- 6    
  • இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் ஒட்டு மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை- 15.52 கோடி
  • ஆண்வாக்காளர்கள்- 7.89 கோடி,பெண்வாக்காளர்கள்- 7.63
  • முன்றாம்பாலினத்தவர்-11, 030 
  • இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்காக ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 441 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

தொகுதிகள் மாநிலம் வாரியாக

தமிழ்நாடு      - 38 தொகுதிகள்
கர்நாடகா      - 14 தொகுதிகள்
மகாராஷ்டிரா   - 10 தொகுதிகள்
உத்தரபிரதேசம் - 8 தொகுதிகள்
ஜம்மு காஷ்மீர் - 2 தொகுதிகள்
பீகார்          - 5 தொகுதிகள்
அசாம்        - 5  தொகுதிகள்
மணிப்பூர்      - 1 தொகுதி
மேற்குவங்கம் - 3 தொகுதிகள்
ஒடிஷா       - 5 தொகுதிகள்
சத்தீஷ்கர்     - 3 தொகுதிகள்
புதுச்சேரி     - 1  

அதிகரிக்குமா வாக்கு சதவிதம் ?

2014 ஆம் ஆண்டு ஒன்பது கட்டங்களாக நடைப்பெற்ற வாக்குப்பதிவில் 66.38 க்குகள் பதிவாகின. கடந்த காலங்களில் ஒப்பிடும் போது சென்ற முறை மக்களவை தேர்தல் பதிவான வாக்குசதவீதம்தான் சாதனையாக இருந்து வருகிறது. எனவே இந்தமுறை அதைவிட கூடுதல் வாக்குகள் பதிவாக வேண்டுமென தேர்தல்ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பிருந்தே மக்கள் வாக்குச்சாவடிக்கு வரதொடங்கிவிட்டனர். அதேபோல அரசியல் திரைபிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்களித்தனர். இருந்த போதிலும் ஒருசில இடங்களில் வாக்குஎந்திரங்கள் பழுதானதால் மக்கள் சிலர் திரும்பி செல்லும்நிலை ஏற்ப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு எந்திரங்களில் இந்த பழுதுகள் என்பது ஒருசதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.    

முக்கியத்துவம் பெறும் தமிழகம்

மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் திருவிழாவின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தமிழகம்தான் கூடுதல் கவனம் பெறுகிறது
கடந்தமுறை 37 இடங்களில் வென்ற அதிமுக மக்களவையில் 7 % இடத்தை பெற்றது. ஒருவேளை மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில் தமிழகத்தில் வெற்றிபெறப் போகிற கட்சிகளை பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். மேலும் ஜெயலலிதா கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதாலும் தமிழக தேர்தல் களம் மிகவும் உற்று நோக்கப்படுகிறது. 

ஜெயலலிதா இல்லாத அதிமுகவை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?. கருணாநிதி இடத்திற்கு ஸ்டாலின் வருவாரா? தனித்து சென்ற டிடிவிதினகரன் தலைமையை நிருப்பிப்பரா? முதல் தேர்தல் களம் காணும் கமலின் முயற்சி வெற்றி பெறுமா? போன்ற பல கேள்விகளுக்கு மக்கள் இன்று வாக்குகள் மூலம் விடை எழுதுகிறார்கள் … 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com