கிடுகிடுவென உயரும் திமுக, அதிமுகவின் சொத்து மதிப்பு

கிடுகிடுவென உயரும் திமுக, அதிமுகவின் சொத்து மதிப்பு
கிடுகிடுவென உயரும் திமுக, அதிமுகவின் சொத்து மதிப்பு
Published on

திமுக, அதிமுக கட்சிகளின் சொத்துமதிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு(ADR) என்ற தனியார் அமைப்பின் சார்பில் இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்துமதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2011-12 முதல் 2015-16 ஆண்டு வரையில் பிராந்திய கட்சிகளின் சொத்துமதிப்பின் வளர்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. ஆய்வில் இந்தியாவிலே பிராந்திய கட்சிகளில் சமாஜ்வாடி கட்சிக்குதான் அதிக சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. 

2011-12 ஆம் ஆண்டில் ரூ.212.86 கோடியாக இருந்த சமாஜ்வாடியின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் கிடுகிடுவென உயர்ந்து 2015-16 இல் ரூ.634.96 கோடியாக அதிகரித்துள்ளது. சமாஜ்வாடி கட்சிக்கு அடுத்தபடியாக திமுகவும், அதிமுகவும் அதிக சொத்துக்கள் உடைய கட்சிகளாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இதில், அதிமுகவை விட திமுகதான் அதிக சொத்துக்கள் கொண்ட கட்சியாக திகழ்கிறது. 2011-12 இல் முறையே ரூ.89.32, ரூ.88.21 கோடிகளாக இருந்த திமுக, அதிமுகவின் சொத்து மதிப்பு 2015-16 இல் ரூ.265.23, ரூ.224.87 கோடிகளாக உயர்ந்தது. 

முதல் ஐந்து இடங்களில் சமாஜ்வாடி, திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தேமுதிக அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சியாக உள்ளது. 2011-12 ஆம் அண்டில் ரூ.9.21 கோடியாக இருந்த தேமுதிக சொத்து மதிப்பு சரிந்து 2015-16 இல்  ரூ.4.458 கோடியாக ஆனது. மொத்தத்தில், பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.480 கோடியில் இருந்து ரூ.1315 கோடியாக உயர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com