சேலத்தில் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, மாரியம்மாளும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அங்கேயே திடீரென மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் போதிய கண்காணிப்பு இல்லாததே மாரியம்மாளின் தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.