சேலம்: "இதுதான் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடா?" - வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டம்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படவில்லை என அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருசில வேட்பாளர்கள் இல்லாத நிலையில் வைக்கப்பட்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு என்னும் மையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை மையத்தில் வைக்கும்போது சுயேட்சை வேட்பாளர்களை உள்ளே அனுமதிக்காதது மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இளம்பிள்ளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.