இந்த ஆண்டின் சிறந்த காப்பி பேஸ்ட் நிபுணர் என மெர்சல் இயக்குனர் அட்லீயை பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கிண்டலடித்துள்ளார்.
மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸும் எதிராக பாஜகவும் களத்தில் குத்துத்துள்ளன. தமிழிசை தொடங்கி வைத்த இந்த சர்ச்சை பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன் என பரவியது. அதையடுத்து ட்விட்டரில் மோடி வெர்சஸ் மெர்சல் ஹேஸ்டேக் போட்டு விஷயம் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர், “மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும். சென்சார் செய்த படத்தை மீண்டும் சென்சார் செய்வதற்கு வாய்ப்பில்லை. மெர்சல் படம் இத்தகைய பிரச்சினையை சந்தித்துள்ளதற்கு காரணம் சென்சார் போர்டு அதிகாரி மதியழகன்தான். ஒரு படத்தில் தவறான கருத்து உள்ளது என்றால் அதை சரி செய்யத்தான் சென்சார் போர்டு உள்ளது. மெர்சல் படத்தின் மூலம் சிலர் அரசியல் செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த ஆண்டின் சிறந்த காப்பி பேஸ்ட் நிபுணர் யார்?” என கேட்டு இயக்குநர் அட்லீயை அவர் கிண்டலடித்திருக்கிறார்.