பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினார்.
சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது பெங்களூர்.
இதனையடுத்து வெற்றி இலக்கான 146 ரன்களை எடுக்க சென்னை அணியின் தொடக்க வீரர்களான டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி விளையாடினர் இருவரும். முதல் 5 ஓவரில் 46 ரன்களை எடுத்தது. பின்பு டூப்ளசிஸ் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருதுராஜூடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரின் கூட்டணி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சேர்ந்தது.
நிலைத்து நின்று விளையாடிய ராயுடு 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தபோது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் அரை சதம் கடந்தது தோனியுடன் விளையாடி வருகிறார்.